உலகக்கோப்பையில் இந்தியா தோற்றாலும் சில தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சிதான்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று போனது இதனால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்கள் சில புதிய படங்களை வாங்கி திரையிட முன்வந்துள்ளனர்.
அதாவது, இந்திய அணி ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தால் வரும் ஞாயிற்று கிழமை இறுதி போட்டியன்று தியேட்டர்கள் காலை முதல் இரவு வரை வெறிசோடி காணப்படும். முக்கிய மால்களில் ஞாயிறு அன்று வரும் அதிகப்படியான வசூல் பாதிக்கப்படும். எனவே புதிய படங்களை தமிழ்நாடில் முக்கிய திரையரங்குகள் எடுக்க முன்வரவில்லை.
ஆனால் தற்போது இந்தியா தோற்றதின் விளைவாக தற்போது புதிய படங்களுக்கு தியேட்டர் கொஞ்சம் அதிகமாக கிடைத்துள்ளது.