பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆப்கானிஸ்தான் வீரர் சஸ்பெண்ட்!
நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 9 லீக் போட்டியில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
ஆப்கானிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் அப்தாப் ஆலம் ,இவர் நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடினார்.
இந்நிலையில் அணி வீரர்கள் சவுத்தாம்டானில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக அப்தாப் ஆலம் மீது புகார் எழுந்தது.இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது.
ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் ஒழுங்கு நடவடிக்கை குழு புகாரை பற்றி விசாரித்து வீரர்களின் நடத்தை விதியை மீறியதால் ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்து உள்ளது. மேலும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.