தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் – மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது !
இந்தியாவின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் அணுசக்தித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரத்தில் இந்த ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்தில் சுற்றுசூழலுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேனி மாவட்டத்தில் உள்ள மலைகள் இரண்டு கிலோ மீட்டர் குடைந்து ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள் உட்பட பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.