”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்” – ரசிகர்களிடையே நடிகர் ரஜினியின் பெருமித பேச்சு…!
இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்” என பெருமையாக கூறினார்.
அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது ஆண்டவன் கையில் தான் உள்ளது” என சூசகமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.