கங்குலி , சச்சின் சாதனையை முடியடித்த தோனி , ஜடேஜா !

Default Image

நேற்று முன்தினம்  நடந்த  முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி , நியூஸிலாந்து அணி உடன்  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது.

முதலில் நியூஸிலாந்து அணி விளையாடி கொண்டு இருக்கும் போது 46.1 ஓவரில்  211 ரன்கள் எடுத்து  இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து  239 ரன்கள் எடுத்தது.

பின்னர் 240 என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இறுதியாக 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணி 30.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 92 ரன்கள் அடித்து பரிதாப நிலையில் இருந்தது.அப்போது தோனி , ஜடேஜா இருவரும் கூட்டணியில் இனைந்து நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியில்  கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் தற்போது தோனி , ஜடேஜா கூட்டணி முதலிடத்தில் உள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் 116 ரன்கள் குவித்து உள்ளனர்.

இதற்கு முன் இந்திய அணியில் கங்குலி / டெண்டுல்கர் இவர்கள் இருவரின் கூட்டணியில் 2003 – ம் ஆண்டு அரையிறுதி போட்டியில் அடித்த 103 ரன்கள் அதிகபட்சமாக இருந்தது.தற்போது அவர்களின் சாதனையை முறியடித்து உள்ளனர்.

116* – தோனி / ஜடேஜா (7 வது) vs நியூஸிலாந்து  , 2019
103 – கங்குலி / சச்சின்  (2 வது) vs கென்யா, 2003
92 – அமர்நாத் / யஷ்பால் சர்மா (3 வது) vs  இங்கிலாந்து , 1983
90 – எஸ் மஞ்ச்ரேகர் / சச்சின்  (2 வது) vs  இலங்கை , 1996

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament