மாணவர்களை மதம் மாற்ற முயற்சி செய்த ஆசிரியர்கள்!பள்ளியை முற்றுகை இட்ட பெற்றோர்கள்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்ற பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன.
இந்நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவர் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக மதம் மாற்றம் செய்ய முயன்றுரதாக கூறப்படுகிறது.மேலும் தமிழக அரசு கல்விக்கான புத்தகங்களை இலவசமாக வழங்கும் போது இவர்கள் மதம் சார்ந்த புத்தகங்களை விலைக்கு வாங்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஜூலை 10-ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியவுடன் அனைவரும் கலைந்துசென்றுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர்களை மாணவர்களிடம் மதச்சார்பான கருத்துக்களை தெரிவித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025