6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்

Default Image

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி   தேர்வாகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல்  நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் தேசத்துரோக வழக்கின்  தண்டனை காரணமாக  மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?இல்லையா ?என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என் .ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.பின் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்.

போட்டியின்றி தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்:

  • சண்முகம்
  • வில்சன்
  • வைகோ

போட்டியின்றி தேர்வாகும் அதிமுக வேட்பாளர்கள்:

  • முஹம்மத் ஜான்
  • சந்திரசேகரன்
  • அன்புமணி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly