வெள்ளத்தில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய 11 வயது வீர சிறுவன்!
கடந்த சில நாட்களாகவே அசாம் மாநிலத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.இதனால் ஆற்றில் வெள்ளம் பரவலாக ஓடிவருகிறது.இதன் காரணமாக மக்கள் ஆற்றை கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது.
இந்நிலையில் மிசாமாரி என்ற இடத்தில் 11 வயது சிறுவன் உத்தம் டடி என்பவர் வசித்து வருகிறார்.அவர் சோனிபுட் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த இடத்தில் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் ஆற்றை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது ஆற்றில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அவர்கள் ஆற்றில் பாயும் நீரை தாக்குபிடிக்கமுடியாமல் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் ஆற்றில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்த சிறுவன் அவர்களை காப்பாற்ற நினைத்து நீரில் குதித்து மூவரையும் காப்பாற்றியுள்ளார்.
இந்த இளம் வயதிலேயே வீரதீர செயலை செய்தமையால் மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ் அந்த வீர சிறுவனை பாராட்டியுள்ளார்.மேலும் சிறுவனுக்கு வீர தீரத்துக்கான விருது பரிந்துரை செய்யவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுவனின் இந்த வீர செயல் சமூக வலைத்தளங்களில் பெருமையாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.