குழந்தைகள் உயிர்வாழ மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று ! நிடி ஆயோக் அறிக்கை !
உலகில் குழந்தைகள் வாழ மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக இருப்பதாக நிடி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மதம் மட்டும் பீகாரில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் நாட்டின் சுகாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000 ம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போது ஏறத்தாழ பாதியாக குறைந்துள்ளது. இதற்கு குழந்தைகளுக்கு நோய் பரவாமல் இருக்க அரசின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முக்கிய காரணங்களாகும். ஆனால் குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.
ஐந்து வயதிற்கு உட்பட குழந்தைகள் மரணத்தில் இந்திய அளவில் மத்தியபிரதேசம் பீகார் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் சுகாதாரத்தை காப்பதில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.