எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை மனு-சித்தராமையா
கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில்தான் காங்கிரஸ், மத சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த ஓராண்டு காலமாக ஆட்சியில் நீடித்து வருகிறோம்.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் தற்போது 6-வது முறையாக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்கிறது . கட்சி முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டதாக எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்று கூறினார்.