முதல் முறையாக மணிரத்தினம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கும் சித் ஸ்ரீராம்!

Default Image

பாடகர் சித் ஸ்ரீராம் தமிழில் தள்ளிபோகாதே ,மறுவார்த்தை பேச போன்ற ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.தற்போது முதல் முறையாக மணிரத்தினம் தயாரிக்கும்  திரைப்படத்தில் இசையமைப்பாளராக  சித் ஸ்ரீராம் களமிறங்க உள்ளார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்த தனசேகரன் “வானம் கொட்டட்டும்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் விக்ரம் பிரபு , மடோனா ,ராதிகா ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்திற்கு 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த்  வசந்தா இசையமைப்பதாக இருந்தது.ஆனால் படத்தின் ஷூட்டிங் உடனடியாக தொடங்கியதால் கால் ஷீட் பிரச்சனை காரணமாக கோவிந்த்  வசந்தாவிற்கு பதிலாக தற்போது சித் ஸ்ரீராம் இசையமைக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்