இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் : ஓர் அதிர்ச்சி தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பற்றி அறிவிக்க தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பதாக தனது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக காலா, 2.O ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் ஒரே ஒரு படம் மட்டும் நடிக்க போவதாகவும், அதன் பிறகு, அரசியலோ அல்லது முழு ஆன்மீகத்திலோ ஈடுபடபவதாக ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணம், பேர், புகழ் ஆகியவை ஏற்கனவே நிறைய சம்பாதித்து விட்டதால் இனி வேண்டாம் என முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
source : dinasuvadu.com