உலகக்கோப்பையில் கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் கே.எல்.ராகுல் , ரோஹித் சர்மா முதலிடம் !

Default Image

நேற்று முன்தினம் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணியும் , இலக்கை அணியும் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில்  பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிங்கிய  இலங்கை  7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  கே.எல்.ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசினார்.

மேலும் இவர்கள் இருவரின் கூட்டணியில் 183 ரன்கள் குவித்தனர்.இதன் மூலம் உலகக் கோப்பையில்  இந்திய அணி வீரர்களின்  கூட்டணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் , ரோஹித் சர்மா அடித்த 183 ரன் முதலிடத்தில் உள்ளது.

183 * ரோஹித்  சர்மா – கே.எல்.ராகுல் vs  இலங்கை , லீட்ஸ் 2019 *
180 ரோஹித்  சர்மா – கே.எல்.ராகுல் vs  பங்களாதேஷ் , எட்காப்ஸ்டன் 2019
174 ரோஹித்  சர்மா –  தவான் vs அயர்லாந்து,  ஹாமில்டன் 2015
163  ஜடேஜா – சச்சின்  டெண்டுல்கர் vs  கென்யா, கட்டாக் 1996
153 சச்சின்  டெண்டுல்கர் – சேவாக் vs  இலங்கை , ஜோபர்க் 2003

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்