காதலித்த காரணத்தால் 16 வயது மகளை கொன்று ஆற்றில் வீசிய பெற்றோர்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பெற்றோர்கள் 16 வயது மகளை கொலை செய்து உடலை மால்டாவில் உள்ள கங்கை ஆற்றில் எரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது என்று கிராமத்தினர் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திரின் மாண்டல் மற்றும் அவரின் மனைவி சுமதி மாண்டல் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
சிறுமி பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அச்சிந்தியா மாண்டல் என்ற சிறுவனுடன் காதல் கொண்டுள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவொரு ஆணவக் கொலையென காவல்துறை தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் 9 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை கொலை செய்து அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து கங்கையில் வீசியுள்ளனர்.
ஆற்றிலிருந்து உடலை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
March 23, 2025
KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!
March 22, 2025
என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!
March 22, 2025