தமிழக அரசை குறை கூறுவது காங்கிரசின் நோக்கமல்ல-கே.எஸ்.அழகிரி
சென்னையில் ஏற்பட்ட கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், தமிழக அரசை குறை கூறுவது காங்கிரசின் நோக்கமல்ல .குறித்த நேரத்தில் அரசு செய்ய வேண்டியதை செய்யாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் .ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை காலம் தாழ்த்தி செய்கிறார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.