காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபக் பபாரியா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி விலகும் நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் வழங்கினார் ஜோதிராதித்ய சிந்தியா.