2008-ம் ஆண்டு உலகக்கோப்பையில் செய்த சாதனையை மீண்டும் செய்வரா கோலி ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை தொடர் தற்போது வெகு விறுவிறுப்பாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக பந்து அணிகள் கலந்து கொண்டனர்.அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியும் ஒரு போட்டியில் மோத வேண்டும்.
அப்படி அனைத்து அணிகளும் 9 லீக் போட்டிகளில் விளையாடியது.அதில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் இந்தியா ,ஆஸ்திரேலியா , இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதிக்கு பெற்று உள்ளது.
முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் வருகின்ற 09-ம் தேதி மோத உள்ளது.இந்நிலையில் 2008-ம் ஆண்டு 19 -வயத்திற்கு உட்பட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.
அதில் இந்திய அணி கேப்டனாக கோலியும் , நியூஸிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தனர்.அப்போது நடந்த அரையிறுதி போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இந்திய அணி வருகின்ற 09-ம் தேதி நடக்க உள்ள அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்திய அணியை வீழ்த்துமா? என ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.