அடடே கல்லீரலை சுத்தபடுத்த உதவும் முக்கிய உணவுகள் இவைகள் தானாம் !
நமது உடலில் முக்கிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. கல்லீரல் தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. அதிகமான அளவு ஆல்கஹாலை நாம் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரல் பாதிக்க படுகிறது. எனவே நாம் மது பழக்கத்தை உடனே கைவிடுவது மிகவும் நல்லது.மேலும் கல்லீரல் நமது உடலில் உள்ள டாக்சிகன்கள் மற்றும் பல நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது.
கல்லீரலை சுத்தமாக வைத்து கொள்ள நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தண்ணீர் :
கல்லீரலை சுத்தமாக வைக்க நாம் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.மேலும் நமது உடலுக்கு கண்டிப்பாக 70 சதவீதம் தண்ணீர் அவசியம்.
வால்நட்ஸ் :
வால்நட்ஸ் நமது உடலில் உள்ள அம்மோனியாவை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது எப்போதும் கல்லீரலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவியாக அமையும்.
காய்கறிகள்:
கல்லீரலை பாதுகாக்க நாம் தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.மேலும் நாம் ப்ரோக்கோலி மற்றும் முட்டை கோஸ் முதலிய உணவுகளை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால் கல்லீரல் பிரச்சனைகளை சரி செய்யும்.
அவகேடா:
அவகேடா பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் கல்லீரலில் சுத்த படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அவகேடா பழத்தில் க்ளுதாதையோன் ,விட்டமின் ஈ மற்றும் சி சத்துக்கள் நிறைந்து காணபடுவதால் இது உடலை சுத்த படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மஞ்சள் :
மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரலில் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது பித்தப்பைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும் உதவியாக இருக்கும். மேலும் இது கல்லீரலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் உதவுகிறது.
பூண்டு :
பூண்டில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 6 மற்றும் சத்துக்கள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. கல்லீரலில் உள்ள ரத்த செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.