மருமகளிடம் சில்மிஷம் செய்த கணவன்! காசு கொடுத்து கொலை செய்த மனைவி!

Default Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்.இவர் கணவர் முடியாண்டி.மகன் பாண்டிமற்றும் மருமகள் மலருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

அவரின் மகன் பாண்டி,ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் கால்களை இழந்துள்ளார்.பாண்டிக்கும் மலருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில் மாமனார் முனியாண்டி அவ்வப்போது மருமகள் மலரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனை அறிந்த பாண்டியம்மாள் அவரை கண்டித்துள்ளார்.ஆனால் அவர் கேட்குமாறு இல்லை.

தொடர்ந்து அந்த பெண் மலருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு கட்டத்தில் எல்லைமீறி அவர் மருமகளிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பாண்டியம்மாள் 3 கூலிப்படையினருக்கு காசு கொடுத்து கணவரை கொன்றுவிட்டதாக பரமக்குடி காவல்நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் முனியாண்டி இருப்பதை கண்டு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குற்றத்தை ஒப்பு கொண்ட பாண்டியம்மாள் கைது செய்த காவல்துறையினர் கொலை செய்த மூன்று கூலிப்படையினரையும் தேடிவருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்