சசிகலா சசிகலா சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தமிழக அசியலில் அடுத்த பரபரப்பு ஆரம்பம்
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு கடந்த மே 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு மீது ஆகஸ்ட் 22ஆம் தேதி இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
அணிகள் இணைப்பு
அமிதவராய் கோஷ் மற்றும் போப்டே ஆகிய நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்க உள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் சொத்துக்குவிப்பு சீராய்வு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.