மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – திட்ட அறிக்கையை உங்க அரசு இன்னும் சமர்பிக்கல..!அம்பலமான தகவல்
மதுரை மாவட்டம் கே .புதுப்பட்டியில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது அதன் படி பிரதமர் மோடி மதுரை வந்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில்மதுரை-கே .புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான தமிழக அரசு சமர்பித்துள்ள திட்ட அறிக்கை குறித்து மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மனு ஒன்றை அளித்து இருந்தார்.
இந்த மனு குறித்து விபரம் அளித்துள்ளது அதில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை குறித்து எந்த ஒரு தகவலும் தமிழக அரசு சார்பில் இன்னும் சமர்ப்பிக்க படவில்லை என்று அதன் முலம் தெரியவந்துள்ளது.
இதனால் மதுரை – கே .புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்னும் சில கால தாமதம் ஆகும் என்று தெரிகிறது.