மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம்
மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தின் முடிவில் மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.