கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கால்நடை பண்ணைகளை புதுப்பிக்க ரூ.9.50 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைத் துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் .அதன் பின்னர் அவர் பேசுகையில் ,கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணைகளை புதுப்பிக்க ரூ.9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடந்த ஆண்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்ட விலையில்லா அசில் இனக்கோழிகள் வழங்கும் திட்டம், நடப்பாண்டில் அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.