மாநிலங்களவை தேர்தல் : இன்று திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ வேட்பு மனுத்தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் இன்று ( ஜூலை 6-ஆம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.மேலும் மதிமுகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.