புதிய வரி உயர்வால் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம்,வெள்ளி விலை உயரும் நிலை!
இன்று மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவீதமும் , தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பில் , சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயும் , சாலை பாதுகாப்பு வரியாக 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் டீசல் விலையானது 2 ரூபாய் வரை உயரும் சூழல் உருவாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி, பால், உட்பட மக்களின் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான்.
அதே போல். தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதலிருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை சவரன் 600 ரூபாய் வரை உயரக்கூடும். தற்போது நிலையிலே, தங்கம் விலையானது சவரன் ரூபாய் 26,000 தண்டியது . இந்நிலையில், புதிய வரி விதிப்பால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.