தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடையில்லை !
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு விடுதலை புலிகள் ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது.அதில் சில வழக்குகள் விடுபட்ட நிலையில் தேசத்துரோக வழக்கு இன்று நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி வைகோ குற்றவாளி என கூறி ஒரு வருடம் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ மாநிலங்களவைகான தேர்தலில் போட்டியிட உள்ளார். அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை செய்வதாக இருந்தது.தற்போது வைகோ குற்றவாளி என கூறியதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது.
இதை பற்றி சட்ட நிபுணர்களிடம் கேட்ட போது , உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதவியில் இருக்கும் ஒருவரை குற்றவாளி என கூறினால் அவர் பதவியை இழக்க நேரிடும் ஆனால் ஒரு நபர் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை பெற்றால் அவர் தேர்தலில் போட்டியிட தடையில்லை என கூறினர்.