ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்து வருகிறார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் , 2022 -ஆண்டு ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்கள் வீடு பெற்று இருப்பார்கள்.மேலும் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்
2022-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஊராக பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்று இருப்பார்கள்.ஒரே நாடு ஒரே மின்சார அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சம அளவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.