இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாது – வைகோ பேச்சு!

தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2009 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது . தீர்ப்பில், ஒரு வருடம் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. உடனடியாக, ஜாமின் வழங்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இத  விசாரித்த நீதிமன்றம் ஜாமின் வழங்கியது மேலும் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ, நன் இனி என் ஆயுள் உள்ளவரை தொடர்ந்து விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவே பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த  நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும் குறிப்பிட்டுளார்.