குடியரசு தலைவரை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். இந்த சந்திப்பின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், அரசின் தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.