2018 இல் வாட்சப் செயல்படாது

பிரபல ஆண்ட்ரைடு  ஆப் ஆன  வாட்சப் ஆனது 201 7 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதன் படி  2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது.

ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கிய சிம்பியன் எஸ்60, ஆண்ட்ராய்ட் 2.1 மற்றும் 2.2 பதிப்புகள், விண்டோஸ் போன் 7, ஐபோன் 3ஜிஎஸ்/ஐஒஎஸ் 6 ஆகிய மொபைல் இயங்குதளங்களில் செயல்படும் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று கூறி அதற்கான கால அட்டவணையையும் அப்போது வாட்ஸ்ஆப் வெளியிட்டது.இதன் படி மேற்கண்ட மாடல் மொபைல் போன்களில் இனி வாட்சப் செயல்படாது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment