கடைசிவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறிய ஆப்கானிஸ்தான்!
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதியது . இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்க இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. நிதானமாக விளையாடி வந்த எவின் லூயிஸ் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடித்து 58 ரன்னில் அவுட் ஆனார்.பிறகு களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் பிறகு களமிங்கிய நிக்கோலஸ் பூரன் 58
ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுடன் வெளியேறினர்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டை பறித்தார்.
312 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குல்படின் நாயப் ,
ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே குல்படின் நாயப் 5 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இக்ரம் அலி கில் களமிறங்க ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியாக விளையாடினர்.இதனால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.
இவர்கள் கூட்டணியில் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர்.இந்நிலையில் ரஹ்மத் ஷா 62 ரன்னில் வெளியேறினர்.பின்னர் நஜிபுல்லா ஸத்ரான் களமிறங்கினர்.அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இக்ரம் அலி கில் 93 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி விளாசினார்.
பின்னர் சிறப்பாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரான் 31, அஸ்கர் ஆப்கான் 40 ரன்களுடன் வெளியேறினர்.இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி50 ஓவர் முடிவில் 288 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கார்லோஸ் பிராத்வைட் 4 விக்கெட்டையும் ,
கெமர் ரோச் 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் விளையாடிய ஒரு லீக் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.