ரூ 2,515 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினர் முதல்வர்!
2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் 16 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார். எக்கி ஹேமா பிரைவேட் லிமிடெட், சிர்மா டெக்னோலஜி பிரைவேட் லிமிடெட், ரெனேட்டஸ் பிறைகான் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைத்தார். அதே போல் காஞ்சிபுரம் ஓரக்கடத்தில் அமையவுள்ள தொழில்நுட்ப பூங்காக்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூரில் தொழில் நுட்ப பூங்காவில் 150 கோடி மதிப்பில் அமையவுள்ள மகேந்த்ரா ஸ்டீல் சர்வீஸ் செண்டர் உட்பட 16 நிறுவங்களுக்கு 2,515 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 9 ஆயிரத்து 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.