விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்று அரசிற்கு எண்ணம் இல்லை-அமைச்சர் தங்கமணி
சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கமணி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எதிர்கால தமிழக மின்தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்று அரசிற்கு எண்ணம் இல்லை.
800 மெகாவாட் மின்சாரத்தை புதைவட கம்பிகள் மூலம் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே தான் உயர் கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது .உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று உடலில் லைட் எரிவதாக அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.