நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு உறுதியுடன் இருங்கள் …! நீதிபதி வேண்டுகோள்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு உறுதியுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வெற்று அறிவிப்புடன் நிற்காமல் விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர் . ஆனால் , நீட் என்ற நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்ததும் கட் ஆப் மதிப்பெண் கணக்கெடுக்காமல் அனைவரும் நுழைவுத் தேர்வை எழுதும் சூழல் உருவானது.
இதனால் பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் கூட தனியார் பயிற்சி நிலையங்கள் சென்று அதிகம் மதிப்பெண் எடுத்தனர். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர். அனால் இதுவரை உறுதியான வகையில் எந்த முடிவும் எடுக்கவில்லை.