அமமுக துணை பொதுச்செயலாளராக பழனியப்பன் மற்றும் ரெங்கசாமி நியமனம்-தினகரன் அறிவிப்பு
தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.அதை பயன்படுத்தி செந்தில் பாலாஜி வெற்றியும் பெற்றுள்ளார்.மற்றொரு முக்கிய நிர்வாகியுமான தங்க தமிழ் செல்வனும் அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், அமமுக துணை பொதுச்செயலாளராக பழனியப்பன் மற்றும் ரெங்கசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .பொருளாளராக வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.