திமுக வின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு !

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரசொலி பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவீர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார். திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்கு அவருக்கு பங்கும் இன்றியமையாதது என்று பலரும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் திமுகவின் பெரும் தலைவராக வருவார் என்று யூகித்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது திமுகவின் இளைஞர் அணி செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
ஆரம்ப கட்ட பிரச்சாரத்தின் போது தமக்கு எந்த பதவியும் தேவை இல்லை என்றும் தான் திமுகவின் அடிமட்ட தொண்டராகவே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்த நிலையில் அரசியலில் தலைமை பொறுப்பிற்கு வர உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025