கடைசி இரண்டு பந்தில் இரண்டு விக்கெட்டை வீழ்த்திய பும்ரா !
இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதியது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ராவின் அதிரடியான பந்து வீச்சால் இந்திய அணி வெற்றி பெற பெறும் உதவியாக இருந்தது.இப்போட்டியில் பும்ரா பத்து ஓவர் வீசி அதில் 55 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார்.
அவர் வீசிய பத்து ஓவேரில் ஒரு ஓவரை மெய்டன் செய்தார்.இப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய பும்ரா கடைசி இரண்டு பந்தில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற செய்தார்.
???? "What a way to end a cricket match!"@Jaspritbumrah93 goes bang ???? bang ???? to end an exciting clash against Bangladesh at Edgbaston #TeamIndia #CWC19 pic.twitter.com/lvorQK66UZ
— ICC (@ICC) July 2, 2019