“பிரதமரின் மித்ரா கடன் திட்டத்தில் மோசடி” – தமிழகம் முதலிடம்!

Default Image

பிரதமரின் மித்ரா கடன் வழங்கும் திட்டத்தில் 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளதாகவும் அதில் தமிழகத்தில் தான் அதிகமாக மோசடி நடந்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில், பிரதமரின் மித்ரா கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இந்த ஆண்டு 2019 ஜூன் மாதம் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 19 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தில் மூலம் 2,313 மோசடிகள் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் தொடர்புடைய 103 அதிகாரிகளில் 63 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி கணக்குகளில் அதிகபட்சமாக தமிழகத்தில் 344 , சட்டீஸ்கரில் 275 ஆந்திராவில் 241 கணக்குகளிலும் மோசடி நடந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்