சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா !
இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக இருவருமே விளையாடி வந்தனர். இப்போட்டியில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசினார்.
மேலும் நடப்பு உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதமாகும்.இதற்கு முன் இந்திய அணியில் ஒரு உலகக்கோப்பை போட்டியில் சச்சின் 3 முறை மட்டுமே சதம் அடித்து இருந்தார்.தற்போது ரோஹித் சர்மா சச்சின் சாதனையை முறியடித்து உள்ளார்.