புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பிள்ளையை கொடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி!திடுக்கிடும் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெண் மல்லிகா.இவர் அங்குள்ள அரசியல் பிரமுகர் ஒருவரிடம் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி 40 ஆயிரம் ரொக்கமும் 8 பவுன் நகையும் கொடுத்துள்ளார்.
அப்போது வேலை தொடர்பாக அந்த பிரமுகரும் அந்த பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவரும் நெல்லை,தூத்துக்குடியில் உள்ள விடுதியில் நாள் கணக்காக தங்கும் அளவிற்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த பிரமுகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி தரவில்லை.மல்லிகா பணத்தை திருப்பி தருமாறு கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மல்லிகா ஸ்ரீவைகுண்டம் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இந்த புகார் அங்குள்ள எஸ்ஐயிடம் விசாரணைக்கு சென்றுள்ளது.அதன் பின் அந்த பிரமுகரை எஸ்ஐ விசாரித்துள்ளார்.
பின்னர் புகார் கொடுத்த பெண்ணின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி அழைத்து பேசியுள்ளார்.பின்பு அந்த பெண்ணை ஆசை வார்த்தைகளை கூறி மயக்கி ஊர் ஊராக சுற்றியுள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரில் உள்ள விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.எஸ்ஐயின் இந்த நடத்தை வெளியில் கசிய தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் அந்த விடுதிக்கு அவரை கையும் களவுமாக பிடிக்க சென்றுள்ளனர்.இது குறித்து சிறப்பு பிரிவு போலீசார் எஸ்பிக்கு தகவல் அளித்துள்ளனர்.இதானால் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் செல்வதற்குள் எஸ்ஐ அந்த பெண்ணுடன் தப்பியுள்ளார்.
மேலும் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் அங்குள்ள விடுதியில் எஸ்ஐ தனது பெயர்,முகவரியை பதிவு செய்த ஆதாரத்தை மொபைல் போனில் போட்டோ எடுத்து தூத்துக்குடி எஸ்.பி.க்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.பி அந்த எஸ்ஐயை ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.