இரவு நேரத்தில் தப்பி தவறி கூட இத குடிக்காதீங்க தூக்கம் வராது!

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சந்திக்கும் முக்கிய நோய்களில் தூக்கமின்மையும் ஒன்று.இந்த பிரச்சனையினால் பலரும் பாதிக்க படுகின்றனர். இந்நிலையில்  இரவு நேரத்தில் தூக்குவதற்கு முன்பு சில பானங்களை அருந்தினால் நம் தூக்கம் தடை படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சில பானங்களை நாம் தவிப்பது மிகவும் நல்லது.அவற்றை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

காபி மற்றும் டீ :

காபி மற்றும் டீ யில் அதிக அளவில் கஃபைன் நிறைந்து காணப்படுவதால் அந்த பானங்களை இரவில் நாம் தூங்குவதற்கு செல்லும் முன்பு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் காஃபைன் நமது மூளையை எப்போதும் சுறு சுறுப்பாக வைத்திருக்கும். மேலும் இதயம் மற்றும் நரன்பு மண்டலத்தை பாதிக்கும். எனவே நாம் தூங்குவதற்கு செல்லும் முன்பு அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

சாக்லேட் மில்க் ஷேக்  மற்றும் குளிர்பானங்கள் :

இரவு தூங்குவதற்கு செல்லும் முன்பு சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் குளிர் பனங்களில் எந்த விதமான ஊட்டசத்துக்களும் இல்லை. குளிர்ப்பனங்களை அருந்துவதால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

மது :

மது அருந்துவதால் இரவில் தூக்கம் தடை படும். எனவே மது அருந்துவதையும் தவிர்ப்பதும் மிகவும் நல்லது.

பால் :

இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பது மிகவும் நல்லது. பாலில் உள்ள ட்ரிப்ஃடோபன் மூளை செயல் பாட்டை சரி செய்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.