சாமி இரண்டாம் பாகத்தின் கதை இதுவா? : போஸ்டரில் கதை சொல்லும் படக்குழு
சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி, ஹரியின் மாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘சாமி’ இதில் த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் போன்றவர்கள் நடித்து இருப்பார்கள்.
சமீபத்தில் அதன் சூட்டிங் போட்டோக்கள் வெளியாகி இருந்தன. அதில் சாமி முதல் பாகத்தில் கொல்லப்பட்ட பெருமாள் பிச்சையின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் என எழுதப்பட்டு கீழே பாபிசிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் இருக்கும் புகைப்படமும், விக்ரம் பெருமாள் பிச்சையின் வீட்டிலிருந்து வெளியே வரும் படமும் வெளியாகி உள்ளது.
இதிலிருந்து பெருமாள் பிச்சையின் மகனுக்கும், ஆறுசாமியின் மகனுக்கும் இடையில் நடக்கும் தர்ம யுத்தமே சாமி ஸ்கொயராக இருக்கும் என ரசிகர்கள் யூகிக்கிறார்கள். பார்க்கலாம் என்னதான் புதுசா கதை எழுதி இருக்கார்னு!
source: dinasuvadu.com