சாலை அமைக்க எவ்வளவு நிதிஒதுக்கப்படுகிறது-? எவ்வளவு செலவு செய்யப்பட்டது? யாருக்கு ஒப்பந்தம்.? உயர்நீதிமன்றம் உடும்புப்பிடிகேள்வி
சென்னையில் சாலைகள் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? எத்தனை சாலை பணிகள் இதுவரை முடிந்துள்ளது? என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கணைகளை அடுக்கடுக்காக தொடுத்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த அடுக்கடுக்கான கேள்வி எதற்கு என்றால் சாலை போட்டு சென்ற இரண்டே நாளில் வாயை பிளந்து கிடைக்கும் தார் சாலைகள் தான் காரணம்.நிதி ஒதுக்கப்படுகிறது அதனை ஒப்பந்தம் அடிப்டையில் சாலை அமைக்கின்றனர்.ஆனால் கடமைக்கு செய்து விட்டு செல்கின்றனர்.
அப்படி போடப்பட்ட சாலைகள் ஓர் இரு நாளில் மீண்டும் முன்பு இருந்த மோசமான நிலைக்கே சென்று விடுகிறது புகார் அளித்தால் பதிலும் கிடையாது இப்படி எத்தனையோ சாலைகள் தரமற்ற முறையில் தமிழகமெங்கும் காணப்படுகிறது.பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயலே இதற்கு காரணம் என்று பொதுமக்களும் கடித்துரைக்கின்றனர்.
இந்நிலையில் தான் உயர்நீதிமன்றத்தின் கிடுப்பிடி கேள்வியை மாநகராட்சி மீது பாய்ச்சியுள்ளது. இதற்கு மாநகராட்சி என்ன அறிக்கை அளிக்கின்றது என்பதை கவனிப்போம்.