நிதித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு !
நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது புதிதாக எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிகால் துறையின் ,முதன்மை செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது நிதித்துறை செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்து வந்த பாதை:
1989ம் ஆண்டு ஐ ஏ எஸ் பிரிவில் தேர்ச்சியடைந்த கிருஷ்ணன் அவர்கள் நிதித்துறை சார்ந்த துறைகளில் நீண்ட அனுபவம் மிக்கவராய் இருந்து வந்துள்ளார். 1991-92 ம் ஆண்டு கடலூர் மாவட்ட துணை ஆட்சியராகவும், 1996-97 ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராகவும் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு கழக செயலாளராகவும் இருந்துள்ளார்.
1997 முதல் 2000 ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், 2000 ம் ஆண்டு நிதித்துறை இணைச் செயலாளராகவும் , 2011 ம் ஆண்டு வணிக வரித்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் 2004 முதல் 07 வரை மத்திய நிதி அமைச்சகத்தின் தனி செயலாளராகவும் , 2007 முதல் 10 வரை இந்திய நிர்வாக மையத்தில் மூத்த ஆலோசனையாளராவும் இருந்து வந்துள்ளார்.