ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு பருவகாற்றின் தாக்கம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவகாற்றின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.