தோனியை வெறுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆதரவாளர்கள்!

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர்.
பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தோனி நேற்றைய போட்டியில் மத்தியில் களமிறங்கினர்.இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்திய அணியை மீட்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்பை தோனி நிறைவேற்ற வில்லை.அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் தோனி சிங்கிள்ஸ் அடித்து விளையாடியது ரசிகர்களிடம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போட்டியில் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 31 பந்திற்கு 42 ரன்கள் அடித்து இருந்தார்.நேற்றைய போட்டியில் தோனியின் சொதப்பலான ஆட்டத்தால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தோனிக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு தோனிக்கு ஆதரவாக பேசும் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.அந்த பதிவில் “தோனி இதுவரை 49 ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் கடைசிவரை விளையாடி உள்ளார். அதில் 47 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. ஒரு போட்டி டை ஆனது . ஒரு போட்டி தோல்வியில் முடிந்து உள்ளது.அந்த ஒரு போட்டியும் நேற்று விளையாடிய போட்டி ” என தோனிக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025