மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்..!பேருந்துகள் ஓடவில்லை
சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர் .
சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர் . ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன் படி வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஊழியர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் சுமார் 3500 பேருந்துகள் இயக்கப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பேருந்து சேவையின்றி பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.