கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது-கே.எஸ்.அழகிரி
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது. இது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல் .கடந்த ஓராண்டில் மத்திய அரசு பணிக்கு தேர்வான 10,500 பேரில் 560 பேர் மட்டுமே தமிழர்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.