3,000 கோடி செலவில் என்னய்யா கட்டுனேங்க..? மழை தண்ணீ ஒழுகுது.!குவியும் புகார்கள்
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31 தேதி மூவாயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையை குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைக்கப்பட்டது.இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.மேலும் இதன் உயரம் 183 மீட்டர் ஆகும் இதுவே உலகின் மிகப்பெரிய சிலை ஆகும்.மேலும் ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் பெறும் பொருட்செலவில் கட்டப்பட்ட இந்த சிலையில் மழைநீர் புகுவதாக புகார்கள் குவிந்து வருகின்றனர்.குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது இதனால் பட்டேல் சிலையின் கீழ் உள்ள வளாகத்தினுள் மழை நீர் புகுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வருகின்றது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியுடம் கேட்ட போது கனமழை பெய்து வருகிறது மேலும் பலத்த காற்றின் காரணமாக மழைநீர் உள்ளே வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Viewing Gallery of ₹3000 crore Statue of Unity
One rain and it gets flooded, water leaking from the roof and front. Such an expensive statue and they couldn’t even design it to prevent this.. pic.twitter.com/V4pUQxNVS2
— Dhruv Rathee (@dhruv_rathee) June 29, 2019