தனியார் பெயரில் இயங்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

தனியார் பெயரில் இயங்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளி பெயர்ப்பலகையில், “அரசு உதவி பெறும் பள்ளி” என பெயரை பொறிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பெயர் பலகையில், ஆங்கிலம் மற்றும் தமிழில், “அரசு உதவி பெறும் பள்ளி” என பொறிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது, பெயர் பலகையில் “அரசு உதவி பெறும் பள்ளி” என குறிப்பிடப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.